ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்று (24) பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.

அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளது

மேலும் கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படவுள்ளன.

மீண்டும் இரவு 7.30 மணிக்குப் பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்குப் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...