ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டனை நிச்சயம்!

Date:

”ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினர்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் பின்னர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

” ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 270 இக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 இக்கும் மேற்பட்டவர்கள் இதனால் காயமடைந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பார்கள் என நாம் இவ்வளவு வருடம் காத்திருந்தோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் அடையாளங்காணப்படவுமில்லை.

குற்றவாளிகள் அல்லது சூத்திரதாரிகள் உயர்மட்ட அரசியல் சக்திகளினால் பாதுகாக்கப்படுவதாகவே தெரிகிறது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக தமது ஆட்சியில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதாக கொழும்பு பேராயர் நேற்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அதனை இன்று எழுத்துபூர்வமாக கையளிப்பதற்காகவே ஆயரைச் சந்தித்திருந்தோம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” இவ்வாறு சுனில் வட்டகல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...