ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், அது பலஸ்தீன சார்புடையதாக அமையும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லு அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனது இல்லத்தில் கடந்த 28 ஆம் திகதி பிரியாவிடை இராபோசன விருந்துபசாரமளித்தார்.
இந்த விருந்துபசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீமுல் அஸீஸ், இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் தாரிக் எம் டி அரிபுல் இஸ்லாம், இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச்.டார் செயிட், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர், இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.