ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு: ருஹுனு பல்கலைக்கழகத்தில் விசேட நிகழ்வு

Date:

‘இப்தார் அல் வஹ்தா’ -ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு இன்று (02) பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு மற்றும் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வுக்கு பஹன மீடியா பிரைவேட் லிமிடெட், முஸ்லிம் எய்ட் அமைப்பு மற்றும் அமேசான் கல்லூரி இணைந்து இதற்கு அனுசரணை வழங்குகின்றன.

நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும்  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவும், விசேட அதிதியாக பிரதி உபவேந்தர் பேராசிரியர் இ.பி.எஸ்.சந்தனவும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வின் போது ரமழான் நோன்பு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் முக்கியமான பல கலாச்சார நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறவுள்ளன.

ருஹுணு பல்கலைக்கழக உள்ளக மண்டபத்தில் இன்று (02) மாலை 4.30 மணிக்கு இப்தார் வைபவம் ஆரம்பமாகவுள்ளதுடன், நேரடி ஒளிபரப்பு Newsnow Facebook  பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...