கண்டி இராசதானி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் 102ஆவது வயதில் காலமானார்.
முஸ்லிம்கள் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட்ட பல வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன.
மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆலோசகர்களாகவும் அரண்மனை வைத்தியர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பது ஒரு சிறந்த வரலாறு.
அத்தகைய வரலாற்று பரம்பரைக்கு சொந்தமான கண்டியின் இராசதானியின் இரண்டாம் இராஜசிங்க மன்னரின் மருத்துவர்களின் பரம்பரையில் 5ஆம் வாரிசாக கருதப்படுகின்ற ஒருவரே ஷேக் முகம்மது உடையயார் ஆசிரியர் ஆவார்.
மாவனல்லை அரநாயக்க கெவிலிபிட்டியவை சேர்ந்த இவர் நேற்று காலமானார்.