சஜித்துடன் இணைந்த மொட்டு உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தோர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் சபை இணைந்து புதிய கூட்டணியை அமைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி நிறுவப்பட்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான

ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர். மேலும், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் இணைந்துக்கொண்டனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...