ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Date:

இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது.

இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருப்பதோடு நம்மிடையே ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வளர்க்கிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளதையிட்டு நான் ஆன்ந்தமடைகின்றேன்.

இந்நாட்டில் ரமழான் நோன்பு காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானதென நான் நினைக்கிறேன்.

தனிமனித முன்னேற்றத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டுச் சமூக விழுமியங்களை உயர்த்துவதற்காக உருவாக்கப்படும் இவ்வாறான விடயங்கள், வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்குமான கூட்டு முயற்சிக்கான அடிப்படையை வழங்கும் என்றும் நான் நம்புகிறேன்.

அர்ப்பணிப்பு, சுயக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட ரமழானில் முன்னிலைப்படுத்தப்படும் விழுமியங்கள், அதை நோக்கிய பயணத்தில் சரியான வழிகாட்டியாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், முழு உலக முஸ்லிம் சமூகத்திற்கும் சமாதானம்,நல்லிணக்கம் நிறைந்த இனிய ரமழான் பெருநாளாக அமைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...