பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 உணவுப் பொருட்களின் விலையை நேற்று (2) முதல் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 550 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாவினாலும், 320 ரூபாவாக இருந்த சின்ன வெங்காயம் 30 ரூபாவினாலும், 510 ரூபாவாக இருந்த கடலைப்பருப்பு கிலோ 16 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 16 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

935 ரூபாவாக இருந்த 400 கிராம் LSL பால் மா பாக்கெட் 10 ரூபாவாலும் 200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா 8 ரூபாவினாலும், 43 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 195 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 3 ரூபாவினாலும், 595 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோயா மிட் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...