நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்யும் வகையில் இடைக்கால நிர்வாக சபையொன்றை வக்பு சபை நியமித்துள்ளது.
இதற்கான நியமன கடிதங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழங்கி வைத்தார்.
இக்குழுவின் அங்கத்தவர்களாக பின்வருவோர் இடம்பெறுகின்றார்கள்.
தொழிலதிபர் எம்.டீ ருஹுல் ஹக், சட்டத்தரணி எம்.ஏ.எம். அஸீம், அஷ்ஷெய்க் . எச்.எம். மின்ஹாஜ், (இஸ்லாஹி), ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம். நிஜாம், அஷ்ஷெய்க் எம்.எம்.முஹ்சீன், கிராமசேவகர்களான என்.எம். ரிஸ்மி, எம்.எப்.எம் முஜாஹித், வர்த்தக சங்கத்தலைவர் வை.எம்.நிஸ்தார், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் இரண்டரை மாத கால இடைவெளியில் பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்வது அவசியம் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலா அஹமத் ‘நியூஸ் நவ்’ க்குத் தெரிவித்தார்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் புத்தளம் பிரதேசத்தில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.