புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் “மக்கள் மேடை”!

Date:

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான “மக்கள் மேடை” இன்று வியாழக்கிழமை (18) காலை புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு “தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில். இடம்பெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் தலைமையில், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் (IRES) நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜனாயக்க அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயலாளர் முஹம்மது நௌபல், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவின் புத்தளம் தொகுதி இணைப்பாளர், சமய தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் பிரமுகர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரைகளை தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

(எம்.யூ.எம்.சனூன்)

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...