புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக் நாட்டைச் சேர்ந்த சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே(India Today) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு சர்சையில் சிக்கிய நபர் ஆவார்.
இவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவர் பலமுறை சுவீடனில் அகதி அந்தஸ்து கோரிய போதிலும் சுவீடன் இவரது அகதித் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடு கடத்த தயாராக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி புதன் கிழமை சுவீடனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்ளிவாசலொன்றுக்கு முன்னால் இனம் தெரியாத ஒரு நபரால் புனித குர்ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.
சுவீடன் பொலிஸாரின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்யும் வண்ணம் அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர் குர்ஆன் பக்கங்களை கிழித்து, அதை கொண்டு தங்களது காலணிகளை துடைத்தனர். பின்னர் அதனை தீயிட்டு கொளுத்தினர்.
முஸ்லிம்களின் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் துருக்கியை தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடுகளிலிருக்கும் சுவீடன் தூதுவர்களை அழைத்து சுவீடன் மீதான தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டித்தன.
குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை சுவீடன் பொலிஸார் கைது செய்தனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் இருந்து தப்பித்து சுவீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
குர்ஆனை எரிக்கும் போராட்டத்திற்கு சல்வான் போலீசாரிடம் அனுமதி கேட்டதுடன், சுவீடனில் குர்ஆனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார் எனவும் சுவீடன் அரசு ஊடகமான டச்சுஸ் வெல் (Deutsche Welle) செய்தி வெளியிட்டிருந்தது.