– பெருநாள் தலைப்பிறை உறுதிப்படுத்தப்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்

Date:

இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (10) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (09) மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான இன்று (09) மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஒரு சில இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறை காணப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்த சில மணித்தியாலங்கள் சென்ற நிலையில் மிக நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் பிறைக் குழுவினால் ஏகமனதாக குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப் பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...