மத்திய கிழக்கு நாடுகளில் சமீப நாட்களில் கனமழை கொட்டி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கன மழை பெய்த நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்தது.
புனித நகரான மதினாவில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒரு மசூதியின் மேற்கூரையிலிருந்து மழை நீர் அருவி போல் கொட்டியது. ரியாத் உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மழை தொடரும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
“மே 1 ஆம் திகதி பஹ்ரைனிலும், மே 2 ஆம் திகதி அபுதாபி, துபாய், ஷார்ஜாவிலும் மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.
🚨🇸🇦 More Cloud Seeding gone wrong again today in Saudi Arabia pic.twitter.com/740hqRhlU2
— Concerned Citizen (@BGatesIsaPyscho) April 29, 2024