வரலாற்றில் முதல் தடவையாக ரொபோட்டிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை மாணவர்கள்!

Date:

உலகளாவிய ரீதியில் நடாத்தப்படவுள்ள ரொபோக்களுக்கான போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள கொழும்பில் அமைந்துள்ள புர்ஹானி செரண்டிப் பாடசாலையில் (Burhani Serendib School) கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக  ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க விருது (International Creativity and Innovation Award – ICIA) என அழைக்கப்படும் இந்த போட்டியானது, உலகிலுள்ள தலைசிறந்த கண்டுபிடிப்பு திறன் கொண்ட இளையோருக்கான போட்டியாகும்.

இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள ஆறு மாணவர்களும் இம் மாத இறுதியில் தாய்லாந்தில் தமது திறமைகளை வெளிக்காட்டவுள்ளனர்.

ICIA விருது என்பது வெறுமனே ஒரு போட்டி மட்டுமல்ல, இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை விரிவாக்கும் ஒரு கற்றல் தளமாகவும் அமைந்துள்ளது.

மேலும் இந்த போட்டியானது உலகளவில் கண்டுபிடிப்பு சிந்தனையை வளர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு புதிய கண்டுபிடிப்பு

ப்ளேஸ் அலர்ட் – ஹாதிம் அப்துல் ஹுசைன், மொஹமட் மொய்ஸ் மற்றும் முஃபதால் ஷிராஸ் ஆகிய மாணவர்களால் இந்த ப்ளேஸ் முன்னெச்சரிக்கை சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனமானது, மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. காட்டுத் தீயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, பாரிய பேரழிவுகளை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும்.

கடல் துடைப்பான் – ஹுசைன் சோஹைர், ஹசைவா தாவூட் மற்றும் ஹாடீம் சோஹைர் ஆகிய மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், கடல் மாசுபாட்டை கட்டுக்குள் வைக்க உதவும்.

இந்த சாதனம் நீரின் மேற்பரப்பிலிருந்து குப்பைகளை அகற்றி, மறுசுழற்சிக்காக நியமிக்கப்பட்ட கொள்கலனில் சேகரிக்கிறது.

இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிக்கும் Krya.id மையமானது, கல்வி , ஊடகம் மற்றும் தொழில்முறை ஒத்துழைப்புக்களின் மூலம் இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கானது.

Krya.id இன் நோக்கமானது, அடுத்த தலைமுறைகளுக்கான பிரச்சினைகளை தீர்த்து, சவால்களை எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமான ஒரு சமூகத்தை உருவாக்கும் திறமையாளர்களை தயார் படுத்துவதே.

எனவே இலங்கையிலிருந்து இந்த போட்டியில் பங்கேற்கயிருக்கும் மாணவர்கள், அவர்களின் திறமைகளை மட்டும் வெளிக்கொண்டு வரப் போவதில்லை. இலங்கைத்தீவின் எதிர்காலத்தின் மிக முக்கிய சுற்றுச் சூழல் பிரச்சினைகளை தீர்க்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
மூலம்: டெய்லி மிரர்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...