விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்ற திஹாரிய தம்பதிகள் உயிரிழப்பு!

Date:

கண்டி – தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதி, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் ஆயிஷா – வயது 22, ஆண் தில்ஷாத் – வயது 28 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை – அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஹாரிய, ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியினரே, இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்குச் சென்ற போது, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள “மோல் கல்” என்ற இடத்திற்கு இவர்கள் இருவரும் (15) திங்கட்கிழமை நண்பகல் நீராடச் சென்றுள்ளனர்.

 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Popular

More like this
Related

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம்...

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான்...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...