ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை (நோன்புப் பெருநாளை) தீர்மானிக்கும் மாநாடு இன்று 09ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இதுதவிர, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், மேமன் சங்க பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் பிரதிநிதிகள், பள்ளிவாசல் கதீப்மார்கள், பேஷ் இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிறை தென்பட்டால் பூரண ஆதாரத்துடன் 0112432110, 0112451245, 0777353789 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.