அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு

Date:

இஸ்ரேலுக்குள் அல் ஜசீரா என்ற தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அல் ஜசீரா சேனலின் செயல்பாடுகளை 45 நாட்களுக்கு நிறுத்தி வைக்க இந்த வாக்கெடுப்பு இஸ்ரேலுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டு ஒலிபரப்பாளர்களை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் இஸ்ரேல் நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள பலஸ்தீன மக்களின் இன்னல்களையும்இ காஸா களநிலவரத்தையும் வெளிக்கா ட்டிய ‘அல் ஜஸீரா ‘ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதி துள்ளது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ‘அல் ஜஸீரா ‘ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு
ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...