ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு: மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை!

Date:

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த  ரெமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது.

இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காங்கேசன் துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

களனிகங்கை, களுகங்கை மற்றும் நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த பகுதிகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...