இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதித்ததனூடாக செல்வன் துஸ்யந்தன் பிரசாந்தன் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மூலக்கூறு உயிரியல் (molecular biology) பாடத்திற்கு தெரிவாகியிருந்த பிரசாந்தன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத் தெரிவிற்காக க.பொ.த உயர்தர பரீட்சையில் மேலதிக ‘Z’ புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளில் இணைபாடவிதானச் செயற்பாடுகள்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு Z புள்ளி கணிக்கப்படுகிறது.
எனினும் மாணவர் ஒருவர் இணைப்பாடவிதானத்தில் வெளிப்படுத்திய திறமைகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலதிக ‘Z’ புள்ளிகளை வழங்கி அவர்களுக்கு மேலதிக வாய்ப்பை வழங்கி வருகிறது.
2022 ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 99 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகினர் மேலும் இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் எமது பாடசாலையின் க.பொ.த உயர்தரம் 2022 உயிரியல் பிரிவு மாணவனுக்கு மருத்துவ பீடம் (ஊவா வெல்லச பல்கலைக் கழகம்) செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிரகாரம் அவரால் ஈட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான சான்றுகள் வருமாறு,
உயர்தரப் பரீட்சை பெறுபேறு – A2B
மாவட்ட நிலை – 113
Z – புள்ளி 1.7822
1) மேற்கத்தேச இசை வாத்தியக் குழு (தரம் 7 – உயர்தரம் வரை)
மேற்கத்தேச இசை வாத்திய சான்றிதழ் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் நடாத்தப்பட்ட மாணவர் படையணி நிகழ்ச்சித்திட்டம்
2) கீழைத்தேச இசை வாத்தியக் குழு ( தரம் 10 – உயர்தரம் வரை)
3) இயற்கைச் சூழல் மன்ற (Nature Club) உறுப்பினர்
4) வினாடி வினாப் போட்டிச் சான்றிதழ்கள்
5) சாரணர் இயக்கச் சான்றிதழ்கள்
6) மாணவர் முதல்வர் சபை மற்றும் சான்றிதழ்கள்
7) கவின் கலை மன்ற உறுப்பினர்
தேசிய மட்டத்தில் முதலாம் இடம் -கர்நாடக சங்கீத குழுவாத்திய இசை – 2022
9) தேசிய மட்டத்தில் முதலாம் இடம் வீணையுடன் மிருதங்கம் -2019
10) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் – குழு இசை – 2018
11) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பாட்டு, மிருதங்கம் – 2019
12) வலய மட்ட வில்லுப்பாட்டு
13) வலய மட்ட நாட்டார் பாடல்
விளையாட்டு
14) கூடைப்பந்தாட்ட அணி ( தரம் 6 – தரம் 9)
15) மெய்வல்லுனர் போட்டி ஓட்டம்
நேர்முகத்தேர்வில் உயர்தரக் காலப்பகுதியில் பெற்ற அடைவுகள் பிரதானமாக கொள்ளப்பட்டாலும் பாடசாலைக் கால அடைவுகள் அனைத்தும் கருத்திற்கொண்டு நோக்கப்பட்டது.
பாடசாலையால் வழங்கப்பட்ட நற்சான்றுப் பத்திரம், மற்றும் மாணவர் முதல்வர் சபையால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் கருத்திற்கொள்ளப்பட்டது.
எனவே மாணவர்கள் மேற்படி விடயங்களைக் கருத்திற் கொண்டு இணைப்பாடவிதானத்தில் கவனமெடுத்து தங்களது ஆளுமைத்திறனை உறுதி செய்து கொள்ளல் வேண்டும் என யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் தெரிவித்துள்ளார்.