ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி,வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.