ஈரான் ஜனாதிபதி நிலை என்ன? பதற்றத்தில் உலக நாடுகள்:

Date:

 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது நிலைமை என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரில், பலஸ்தீனத்துக்கு பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இதனால் ஈரான் மீது இஸ்ரேலும் பல முறைமுக தாக்குதல்களை நடத்தி வந்தது.

இதுபோன்ற பதற்றமான சூழலில்,  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர், இன்று இரவு 8 மணியளவில் தரையிறங்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் அங்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரான் அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ” இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் சில அரசு செயலாளர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர்.

துரதிருஷ்டவசமாக இந்த விபத்து நேரிட்டது” எனக் கூறினர். இதனிடையே, ஹெலிகாப்டரில் இருந்த அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் ஈரானில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஈரானிய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. காணாமல் போன ஹெலிகாப்டர் குறித்து ‘சில ஊடகவியலாளர்கள்’ இணையத்தில் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர் என்று தெஹ்ரான் வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘கடந்த சில மணிநேரங்களில் தெஹ்ரான் வழக்கறிஞர் அலுவலகம் இந்தப் பிரச்சினையில் நுழைந்துள்ளது மற்றும் பொதுமக்களை திசைதிருப்புவோருக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது’

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...