ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே இஸ்ரேல் கொலை செய்தது.. சர்வதேச நீதிமன்றத்தில் ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ வழக்கு

Date:

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

பலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எப் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...