கடும் மழையால் புத்தளம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Date:

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, குவைட் நகர் மற்றும் பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

அதேபோல புத்தளம் தள வைத்தியசாலை தொடர்ந்து பெய்து வரும்‌ கன மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் வீடுகளுக்கள் வெள்ள நீர்  புகுந்துள்ளமையினால் சுமார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சில குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...