கம்பஹாவில் காணாமல் போன பாடசாலை மாணவிகள் கண்டுபிடிப்பு

Date:

கம்பஹா, யக்கல பகுதியில் மேலதிக வகுப்புகளுக்காக சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யக்கல பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாருக்கும் கிடைத்திருந்தன.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவிகள் பொலன்னறுவையில் இருந்து காலி செல்லும் போது பெண்ணொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதேவேளை மூன்று மாணவிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...