கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.