சர்வதேச மதத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை மதக் குழு

Date:

மலேசியா, கோலாலம்பூரில் மே 7ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மதத் தலைவர்களின் மாநாட்டில் இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜன் ஃபலீல் தலைமையிலான சர்வமதக் குழு பங்கேற்கவுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி,நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான முகமது அப்துல்கரீம் அல்-இசா மற்றும் செனட்டர்  டத்தோ செட்டியா ஹாஜி ஆகியோர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். முகமது நயிம் பின் ஹாஜி மொக்தார்இ பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்).

இலங்கைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பனகல உபதிஸ்ஸ தேரர், ஜப்பான் பிரதம சங்க நாயகம் வணக்கத்திற்குரிய நரேந்திரன் குருக்கள்,  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ஷேக் ரிஸ்வி முப்தி,முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் தலைவர் ஷேக் எம்.எஸ்.எம் தாசிம், ஹஜ் சபையின் முன்னாள் தலைவர் அஹ்கம் உவைஸ் மற்றும் கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...