சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

Date:

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கின் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளரான குறித்த சந்தேக நபர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடத்த இருந்த 1,500 விஷத் தேள்கள் மற்றும் சிலந்திகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மருந்து திரவங்களைக் கொண்ட டசன் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த திரவமானது தேள் விஷத்தில் இருந்து பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க மருந்து என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதுடன் இது லிட்டருக்கு 10 மில்லியன் டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் சட்டங்களுக்கு அமைய இத்தகைய உள்ளூர் இனங்களை ஏற்றுமதி செய்வது தடை  செய்யப்பட்டுள்ளன.

தேசிய வனவிலங்கு கடத்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில்  இவர் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...