நிலவும் மழையுடனான காலநிலை: 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

Date:

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கணை, அங்கமுவ, மஹாவிலச்சி, தெதுரு ஓயா , தப்போவ மற்றும் குக்குலே கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேருவளை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

அந்த வீடுகளில் உள்ள மக்கள் தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வீடுகளின் மீது மண்மேடுடன் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக களுகங்கை, ஜின்கங்கை, நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மில்லகந்த, துனமலே ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...