நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்து’: மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

Date:

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணத்தை குறைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம் இந்த மாதம் 20 ஆம் திகதி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும் “ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன்நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...