புதுடில்லியில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாடு: இராஜாங்க கல்வி அமைச்சரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் பயணம்

Date:

புதுடில்லியில் நடைபெறுகின்ற சர்வதேச கல்வி மாநாட்டிற்கு இராஜாங்க கல்வி அமைச்சரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்கார் பயணமானார்.

புதுடெல்லியில் இடம்பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் இணைந்து கொண்டார்.

இந்திய தலைநகரான புது டெல்லியில்   26 ஆம் திகதி முதல் நாளை 30 ஆம் திகதி வரை தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு -2024 இடம் பெறுகின்றது.

புதுடெல்லியில் இயங்கிவரும் டொக்டர் கலாம் சர்வதேச ஒன்றியம் மற்றும் தரமான கல்விக்கான சர்வதேச அமைப்பும் மற்றும் தெற்காசிய சர்வதேச அமைப்பு என்பன இணைந்து இந்த சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தலைமையில் 25 துறைசார் நிபுணர்கள் பங்கெடுத்துள்ளனர்.

உலகலாவிய நவீன கற்பித்தல் முறை,ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை எவ்வாறு மேம்படுத்தல்,முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விஷேட புதிய கல்வித்திட்டம் மற்றும் திறன் சார்ந்த கல்வித் திட்டத்தின் தொலை நோக்கு என்பனவற்றுடன் பிரதான தலைப்புக்களில் இந்த மாநாட்டின் அமர்வுகள் இடம் பெற்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் எம்.உதயகுமாரன் மேல் மாகாண முன்பள்ளி பாடசாலை பணிப்பாளர் மற்றும் முக்கிய பிரதிநிதிகளும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இருநாள் கண்காட்சியும் மற்றைய இரு தினங்கள் முக்கிய தலைப்புக்களில் கலந்துரையாடல்களாகவும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பிரதம அதிதியின் உரையினை இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நிகழ்த்தியுள்ளார்.

இதேபோன்று சிறப்பு சொற்பொழிவினை இலங்கை அமேசன் கல்வி நிலையம் மற்றும் அமேசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் நிகழ்த்தியுருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய தினம் புதுடெல்லியில் உள்ள முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறியும் வகையில் கல்வி கள சுற்றாலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவின் நோக்கமானது, முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறிந்து அதனை திட்டமாக வகுத்து இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளமை முக்கிய அம்சமாகும்.

நாளைய தினம் வியாழக்கிழமை(30) தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும்  அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...