புத்தளத்தில்  சாதாரணத் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு

Date:

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, புத்தளம் பிரதேச செயலகம், மற்றும் எடியு மயின்ட்ஸ் அணியினர் ஆகியோர் ஒன்றிணைந்து 2024ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச  வழிகாட்டல் செயலமர்வொன்றை நேற்று புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்விலே பல்வேறு பாடசாலைகளில் இருந்து புத்தள கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்கள்  கலந்து கொண்டு பிரயோசனம் பயனடைந்தார்கள்.

சுய பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வானது,புத்தளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்  அஸ்மில் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து  நிகழ்வின் வளவாளர்களில் ஒருவரான புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவரும் வவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் சிறப்பு பட்டத்தை பயின்று கொண்டிருப்பவரும் தேசிய தொழில் வழிகாட்டல் பாட நெறியை தொடர்ந்து கொண்டிருப்பவருமான எம்.ஆர்.எம் ஷவ்வாப் அவர்கள் மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சி ஒன்றை செய்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வின் பிரதான வளவாளரும் புத்தளம் பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.ஏ எம். பர்ராஜ் அவர்கள் சைகோ மெட்ரிக் டெஸ்ட் மூலம் எவ்வாறு துறைகளைக் கண்டறிவது மற்றும் பாடங்களை தெரிவு செய்வது என்ற  முக்கிய எண்ணக் கருவை மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பில் அங்கத்துவம் கொண்டு பல்கலைக்கழகங்களில் வர்த்தகம்,கலை, தொழில்நுட்பம், விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் துறைசார் அடைவுகளை அடைந்த கீழ்வரும் நபர்கள் மூலம் துறைகள் சம்பந்தமாக சிறிது நேரம் விளக்கப்படுத்தப்பட்டது.

வர்த்தக துறையை புத்தகம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைத்தரு விரிவுரையாளருமான செல்வி.ரப்பத் அவர்கள் விளக்கம் அளித்ததோடு கலைத்துறை தொடர்பான விளக்கத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகள் மாணவன் செல்வன். ஹனீஸ்  விளக்கம் அளித்ததுடன் தொழில்நுட்பத் துறை தொடர்பான விளக்கத்தை இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இலத்திரனியல் பொறியியல் துறையில் பயிலும் மாணவன் செல்வன் நஃபீஸ் அவர்கள் விளக்கம் அளித்ததோடு விஞ்ஞான மற்றும் கணிதத்துறை தொடர்பாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினருமாகிய செல்வன் ஹூபைப் அவர்கள் விளக்கமளித்தார்.

அதேபோல இந்த நிகழ்வின் ஏற்பாடுகளின் போது புத்தளம் பிரதேச செயலகத்தின் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரைசா பர்வீன் அவர்கள் பங்களித்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு  எடியு மயின்ட்ஸ் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியதோடு புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பல்வேறு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...