பொருளாதார மீட்சிக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

Date:

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் நாடு தீ பற்றி எரியும் போது நாட்டுக்காக நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றேன். எனது தீர்மானங்கள் வெற்றிப் பெற்றுள்ளன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இயலுமான வகையில் நிவாரணம் வழங்குவோம், இதற்காக 12 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும். மறுசீரமைப்புக்களால் நாட்டின் நிதி நிலைமை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளன.

அரச செலவுகள் 20 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3 சதவீதத்தால் உயர்வடையும் என்று மேலும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...