‘முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் விவகாரத்தை அரசியலாக்குவது நல்லதல்ல’

Date:

குறிப்பு: நேற்று எமது செய்தி தளத்தில் முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமனம் பற்றிய செய்தியை பிரசுரித்தோம். இவ்விடயம் முஸ்லிம் சமூகம் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல் மட்டத்தில் பல விமர்சனங்களை அவதானிக்க முடியுமாக இருக்கிறது. இது தொடர்பாக முகப் புத்தகத்தில் பதிவிடப்பட்ட ஒரு கருத்தை வாசகர்களுக்கு முன்வைக்கிறோம்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் வரும் வரை திணைக்களத்தின் 9 மாடி கட்டிடத்தில் 3ஆவது மாடியில் கிறிஸ்தவ திணைக்களம் உள்ளது.

கிறிஸ்துவ திணைக்களத்தின் பணிப்பாளராக  சத்துரி பின்டோ அவர்களே பதில் பணிப்பாளராக நியமிகக்கப்பட்டுள்ளார். மிகத் திறமையானவர்,  துணிச்சல்மிக்கவர் மிகத் தியாகத்துடன் பணியாற்றுகின்றார்.

தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம் , தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் மிகத் திறமையானவர் அவர் இருக்கும் இந்த குறுகிய காலத்தில் திணைக்களத்தின் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் இதனை அரசியலாக இனவாதமாக எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பார்க்க கூடாது.

இதனை வைத்து அரசியல் செய்யவும் கூடாது மிக துணிச்சலான மிக நேர்மையான ஒருவர் பதில் பணிப்பாளர் மட்டுமே உண்மையில் எமது முஸ்லிம் அரசியல் மற்றும் ஏனைய ஒருசிலர் இதனை அணுகும் முறை கவலைக்குறியதாகும் எனவும் குறிப்பிட்ட முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...