அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தபாகர் தின நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
‘Artificial Intelligence, Disinformation, Deep fake and Democracy’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பேச்சாளர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.எம்.சுஹைர், சாலிய பீரிஸ்,மற்றும் Regional Advisor, Asia Pacific International கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தற்போது 50 வருடங்களை கடந்து தொடர்ந்தும் சேவையாற்றி வருகின்றது.