அனைவரினது மனதையும் நெகிழ வைத்த முன்மாதிரி திருமணம்!

Date:

உலகெங்கிலும் பல இடங்களில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்தும் திருமண வைபவங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்திய திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆடம்பரங்கள் இல்லாமல் பெற்றோர்களின்றி கைவிடப்பட்டுள்ள சிறுவர்களின் முன்னிலையில் ஒரு அழகான திருமணம் நேற்று (09) நடத்தப்பட்டுள்ளது.

அக்குறணையைச் சேர்ந்த பஸ்லான் ஏ . காதர் மற்றும் சகோதரி அப்ரா அக்ரம் தம்பதிகளே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு,வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்த திருமணம்,ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது

ஆதரவற்றோரை அரவணைத்த இலங்கை வாலிபனின் முன்மாதிரி திருமணம் ஊருக்கு பெருமைக்காகவும் வீண் புகழுக்காகவும் கோடிகளில் வீண்விரயம் செய்து மார்க்கத்துக்கு மாற்றமான நிகழ்வுகளுடன் நடைபெறும் திருமணங்களுக்கு மத்தியில் இப்படியான முன்மாதிரியான திருமணம்.

‘நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.’ ‘இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்’

இது போன்ற புனித இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

நம் வீடுகளில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில், உறவுகளுக்காவும், அன்புக்காகவும் ஏங்கும் ஆதரவற்ற முதியோர்களையும் இணைப்பது பெரும் தர்மமாக அமையும்.

இறைவன் எமது எண்ணங்களையும், செயல்களையும், உறவுகளையும் ஏற்றுக்கொள்வானாக.

தனது திருமண நிகாஹ் வைபவத்தை குடும்ப சகிதம் அவ்விடம் வந்து, நிகாஹ் மஜ்லிஸை செய்து சாப்பாடு கொடுத்து அவ்விடத்தை மகிழ்வாக்கினார்கள்.

தன் சொந்த வீட்டில் திருமணம் நடந்தால் எவ்வகை சந்தோஷம் ஏற்பட்டிருக்குமோ அவ்வகை சந்தோஷத்தை அச் சிறுவர்களின் முகங்களில் காணக்கிடைத்து.

திருமண வாழ்வில் இணைந்த பஸ்லான் ஏ.காதர் மற்றும் சகோதரி அப்ரா அக்ரம் அவர்களை வாழ்த்துவதோடு அருள் நிறைந்த வாழ்வொன்றை அல்லாஹ் அவர்களுக்கு பரிசளிக்கட்டும்.

இந்தத் திருமணம் பலரையும் நெகிழ்சி அடைய செய்துள்ளது. அத்தோடு அனைவரினதும் உளமார்ந்த ஆசீர்வாதமும் மணமக்களுக்கு கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...