அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்: பிரதமர்

Date:

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

செப்டெம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படாத விடங்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமையானது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...