அல்குர்ஆனின் மூன்றில் இரண்டு பகுதி யூதர்களின் போதகரான மோஸஸ் பற்றியே சொல்லுகின்றது: வெசாக் வார நிகழ்வில் விரிவுரையாளர் மபாஸ் ஸனூன்

Date:

நபி (ஸல்) அவர்கள் பல்லினச் சூழலுக்கு மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியதுடன் அவர் அதிகமாக யூதர்களுடனேயே கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள் எனவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மபாஸ் சனூன் தெரிவித்தார்.

வெசக் வாரத்தை முன்னிட்டு கெலிஓய, நிவ் எல்பிடிய, ஸ்ரீ விஜித மகா விகாரையில் சிங்கள- முஸ்லிம் மக்களுக்கான  ஒன்றுகூடல் வைபவமும் விருந்துபசார நிகழ்வும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் பேராசிரியர் முவெடகம ஞானநந்த தேரரின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அல்குர்ஆன் முஸ்லிம்களின் சமய நூல் என்றே அனைவரும் அறிகின்றனர். என்றாலும் அதில் மூன்றில் இரண்டு பகுதியில் யூதர்களின் பிரதான போதகரான மோஸஸ் பற்றியே சொல்லப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜீவனை வாழவைப்பவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்று போதனை செய்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் தாய் வழி இறுதியில் சிங்கள சமூகத்தைச் சென்றே சேருகின்றது. அவ்வகையில் இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகளாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கண்டி மன்னன் தலதா பெரஹராவின் போது பொருட்களை கொண்டு வருகின்ற – கொண்டு செல்லுகின்ற பொறுப்பை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து இருந்தான்.

அன்றைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு பள்ளிவாசலை அமைப்பதற்கு விகார – தேவாலய சட்டத்தின் கீழ் இருந்த ஒரு காணியை கண்டி அரசன் கொடுத்துதவினான்.

அந்தப் பள்ளிவாசலின் மாதாந்த செலவுகளுக்காக நிதி வழங்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு மாத்திரம் இருக்கவில்லை. சிங்களப் பிரதானிகளின் அனுமதியுடன் அது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்றதாக அரச ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அன்று சிங்களவர்களும் முஸ்லிம்களும் சிங்களம், முஸ்லிம் என்ற பேதமில்லாத அந்தளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் ஏனைய இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி உருவாக்கப்பட்டதாக இருக்கின்ற சித்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியது.

சர்வதேச ஊடகங்களும் சர்வதேச அரசியலுமே இதற்கான பின்புலக் காரணங்களாக இருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் கனிய எண்ணை வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம்களை தவறாகச் சித்தரிக்கின்ற கலாசாரம் உருவானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நிவ் எல்பிடிய ஜூம்மப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஏ. எம். பாரிஸ், சமூக சேவகர் ஆர். எம். பாஸில் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...