கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 20 ஆம் திகதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக்கூறி சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த நால்வர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் புன்சர அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு போலியான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.