இந்தோனேசிய கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

Date:

இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (19) Kura Kura Bali தீவிலுள்ள “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்துக்கான இலங்கையின் முன்னெடுப்பு (Tropical Belt Initiative), நீலப் பொருளாதாரம் (Blue Economy), கடற்பாசி தொழில்துறை போன்ற விடயங்கள்  தொடர்பாக பேசப்பட்டது.

அதேபோல், தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஒத்துழைப்பு, செயற்றிட்டத்துக்கான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

ஒருங்கிணைந்த இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல், இந்து சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயலகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் சிரேஷ்ட மேலதிகச் செயலாளருமான வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயோதாய் ஜி.எல். கலாகே (Ayodhia G.L Kalake), வனம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவ பிரதி அமைச்சர் நானி ஹெந்தியார்த்தி, (Nani Hendiarti) உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரஹ்மத் கைமுதீன், (Rahmat Kaimuddin) கடல் வளத்துறை பிரதி அமைச்சர் ப்ரீமன் ஹிதாயத் (Firman Hidayat), காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு ஆலோசகர் செரி நூர் சலீம் (Cherie Nur Salim) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...