நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள் இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீனியர்கள் 1948ம் ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில் காணப்பட்டன.
எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
சிலர் 1948ம் ஆண்டு அராபிய இஸ்ரேலிய யுத்தத்தை நினைவு கூர்ந்துள்ளதுடன் சமூகத்தின் அனைத்துர தரப்பினரும் பலஸ்தீனத்திற்காக போரடி உயிர் நீத்தனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த யுத்தத்தில் சியோனிஸ்ட்களிற்கு எதிராக பலஸ்தீனியர்களுடன் இணைந்து ஈராக்கிய படையினர் போரிட்டனர் என அடிப் நசல் என்பவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அராபிய இராணுவம் என்பதே இல்லை அனைவரும் தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
யுத்தத்தை குழப்புதல் என்ற அமைப்பு நக்பாவின் 76வது தினமான இன்று பாலஸ்தீனத்திற்காக உங்கள் நகரங்களை முடக்குங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது
அராபிய மொழியில் நக்பா எனப்படுவது 1948ம் ஆண்டு அராபிய இஸ்ரேல் யுத்தத்தின்போது மிகப்பெருமளவில் பலஸ்தீன மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதை குறிக்கின்றது .
இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதுடன் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதை தொடர்ந்து எதிர்ப்பு குறைவதற்கு அனுமதிக்கவேண்டாம் , காசாவிற்காக எழுச்சிகொள்வோம் என யுத்தத்தை குழப்புதல் அமைப்பு சமூக ஊடகங்களில் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.





மூலம்: அல்ஜஸீரா