காசா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி ரவூப் ஹக்கீம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலை அச்சுறுத்தி, காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை இராஜதந்திர உறவுகளை விலக்கிக்கொள்ளும் என்றும் கடைசி முயற்சியாக இதை செய்யுங்கள்” என்று ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்..
இதற்கு பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதும் பேணுவதும் ஆகும்.
“அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், பேணுவதும்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கை. இருப்பினும், பலஸ்தீனத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை” என்று அவர் கூறினார்.