பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம்.
இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன்.
இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
பெயர் குறிப்பிட்டு கூறுவது இதுவே முதற் தடவை. சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமளித்தே இதற்கு முன்னர் பெயர் கூறாது பேசினேன்.
இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலயே பேசினேன். ஆனால் நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ்த்தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.