ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

Date:

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும் ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...