ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு வருவதற்கான “அடையாளம் எதுவும் இல்லை” என்று அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, குறித்த விபத்தில் ஹெலிகாப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டது” என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த நிலையில் விபத்துக்குள்ளாக ஹெலிகாப்டரை மீட்புக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஜனாதிபதியும் அவரது சகாக்களும் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.
ஆனால் அங்கு நிலைமை “சரியில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.