ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு மத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் கடந்த 19 ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர்.
ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் உடல்கள் தப்ரிஸ் நகரில் இறுதி ஊர்வலத்துடன் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி தலைமையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.
ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது ஈரான் தேசிய கொடி போர்த்தப்பட்டது.
மத வழக்கப்படி குரான் புனித நூல் ஓதப்பட்டு இறுதிசடங்குகள் செய்து வைக்கப்பட்டன.
அப்போது, இடைக்கால அதிபர் முகமது முக்பர் கண்ணீர் விட்டு அழுதார். இந்நிகழ்வில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நயிம் கஸ்சேம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரதிநிதிகள் ரைசி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலிக்கு பின் ரைசியின் உடல் அவரது சொந்த ஊரான மஸ்ஸாத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
68 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
லெபனான், எகிப்து, துனிசியா, சவுதி அரேபியா, குவைத், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ், ஆர்மேனியா, அஜர்பைஜான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வெனிசுலா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இந்த விழாவில் பங்கேற்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசினார்.