ஈரானிய மக்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம்: Amazon college நிறுவனர் இரங்கல்

Date:

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல்,மத,சமூக பிரதிநிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமேசன் கல்வி நிலையத்தின் ( Amazon College and Amazon Compus) நிறைவேற்று பணிப்பாளரும், சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார், அனுதாப பதிவேட்டில் மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்கள் தொடர்பில் பதிவிட்டார்.

மேலும் ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹமட் முக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர்கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் ( Dr.Alireza Delkhosh) அவர்களை சந்தித்து, இது தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...