ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.