ஈரானிய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

Date:

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரரைஸியின் மறைவை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி  உயிரிழந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்தெடுக்க வேண்டும் என்பது ஈரான் அரசியலமைப்பு சட்ட விதி.

அதன்படி,  தெஹ்ரானில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெற உள்ளது.

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரய்சியின் மறைவை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி  உயிரிழந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்தெடுக்க வேண்டும் என்பது ஈரான் அரசியலமைப்பு சட்ட விதி. அதன்படி,  தெஹ்ரானில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  ஹெலிகொப்டரில் திரும்பும் போது  ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...