ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற அனுதாப நிகழ்வின் போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தார்.
மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளிவிவகார அமைச்சும் ஈரான் தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ், தூதுவராலய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், விஷேட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.