ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

Date:

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது.

இலங்கை இராணுவ தளபதி விக்கும்லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம்.கே.எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார்.

இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே,  2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் 24 (1) மற்றும் பிரிவு 24 (2) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கில் பிரதிவாதிகளாகக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...